ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
நிறைவடைந்தது மிஸ்டர் மனைவி தொடர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி தொடர் நிறைவடைந்தது.
வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் கணவனுக்கும் இடையே திருமண வாழ்க்கையில் நடைபெறும் சவால்களே மிஸ்டர் மனைவி தொடரின் கதைக்கரு.
முன்னதாக, நடிகை ஷாபானா மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அஞ்சலி பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி மொடாக் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: இதயம் வடிவில் புயல் சின்னம்.. கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யுமா?
இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடர் 619 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
கடந்த 2023 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்தொடர், 2024 டிச. 22 ஆம் தேதி நிறைவடைந்தது.
மிஸ்டர் மனைவி தொடர் நிறைவடைந்த நிலையில், இத்தொடருக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு மல்லித் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.