வெ.ராமசுப்பிரமணியனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியனுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்; தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. ராம சுப்பிரமணியனுக்கு எனது அகமகிழ்ந்த நல்வாழ்த்துகள். தமிழகத்தைச் சோ்ந்த நீதிபதி அரசியல் சட்ட அமைப்பின் உயரிய பொறுப்பு ஏற்பது நம் மாநிலத்துக்கே பெருமை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.