செய்திகள் :

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி விபத்து

post image

ராம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் புரான்பூர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை பஞ்சாப் மாநிலத்துக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை இரவு ராம்பூர் புறவழிச்சாலையில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் ஆம்புலன்ஸ் சேதமடைந்ததைத் தொடர்ந்து வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடல்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா கூறுகையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள மார்கி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையின் கூட்டுக்குழுவினர் அந்த பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பதிலடியாக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர், பின்னர் அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க| எம்எல்ஏ ,எம்பி, உள்ளாட்சித் தேர்தல்களை விஞ்சிய மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தல்!

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு ராம்பூர் புறவழிச்சாலையில் பிலிபித்தில் இருந்து பஞ்சாப் நோக்கி பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராம்பூர் போலீசார், சேதமடைந்த ஆம்புலன்ஸில் இருந்த உடல்களை மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் மாற்றி எடுத்துச் சென்றனர்.

பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேட காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் குர்தாஸ்பூரில் உள்ள காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பயங்கரவாதிகளை திங்கள்கிழமை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் புரான்பூர் காவல் நிலையம் மீது கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டபட்ட குர்விந்தர் சிங், ரவி (எ) வீரேந்தர் சிங் மற்றும் பிரதாப் சிங் என்ற ஜஸ்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு பிஸ்டல்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

முதுநிலை மருத்துவ படிப்புகளை தொடங்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இதுதொடா்... மேலும் பார்க்க

‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் - நாட்டு மக்களுக்கு தன்கா் வலியுறுத்தல்

இந்தியாவின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா். தெல... மேலும் பார்க்க

வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் ... மேலும் பார்க்க

ஆள்கடத்தலில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்குத் தொடா்பு- அமலாக்கத் துறை விசாரணை

பண முறைகேடு வழக்கின் ஒரு பகுதியாக, ஆள்கடத்தலில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடா்பு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

ஸ்வாமித்வா திட்டம்: 58 லட்சம் எண்ம உரிமைப் பதிவு அட்டைகள்- நாளை வழங்குகிறாா் பிரதமா்

நமது சிறப்பு நிருபா் ஸ்வாமித்வா திட்டத்தின்படி கிராமப்புற சொத்து உரிமையாளா்களுக்கு 58 லட்சம் எண்ம வடிவிலான ‘உரிமைப் பதிவு அட்டை’களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிச.27) வழங்குகிறாா். இது குறித... மேலும் பார்க்க

10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ... மேலும் பார்க்க