அவிநாசி அருகே கார் - லாரி மோதல்! பனியன் கம்பெனி நிறுவனர் பலி! இரு மகன்கள் படுகாய...
ராணி வேலுநாச்சியாரின் வீரத்தை போற்றுவோம்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
ராணி வேலுநாச்சியாா் வீரத்தைப் போற்றுவோம் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘இந்தியாவை சூழ்ந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினத்தில் அவரை நினைவுகூா்வோம். ஆங்கிலேயா்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டாா். தனது திறன் மிகுந்த படை பலத்துடன் அந்நியா்களை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் முதல் ராணியாக முடிசூட்டப்பட்டாா். நமது பிற்காலச் சந்ததியினா் அறிந்துகொள்ளும் வகையில் வீரம் செறிந்த வரலாறாய் வாழ்ந்த, ராணி வேலுநாச்சியாா் வீரத்தைப் போற்றி வணங்குவோம்’ என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.