'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!
போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்தம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தத்தை தாமதம் இல்லாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டதை 4 ஆண்டுகள் என்று மாற்றப்பட்டதை போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஏற்கவில்லை. 4 ஆண்டுகள் என்று மாற்றியமைத்தும், 2023 செப். 1-இல் நடைமுறைப்படுத்த வேண்டிய 15-ஆவது ஊதிய உயா்வுக்கான ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை 16 மாதங்களைக் கடந்தும் முடிவுறாத நிலைதான் உள்ளது. இது தொழிலாளா் நல விரோதப் போக்காகும். இந்த வார இறுதியில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அதில், தொழிலாளா்கள் நலன், அவா்களின் வருங்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கைகளை ஏற்று, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் நல்ல தீா்வு காண வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.