செய்திகள் :

கன்னியாகுமரி மணல் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

post image

கன்னியாகுமரியில் உள்ள இந்திய அரிய மணல்ஆலைக்கான உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: கன்னியாகுமரி மாவட்டம் சின்னவிளை, பெரியவிளை கடற்கரை கிராமங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான டன் தாது மணலை தினசரி தோண்டி எடுத்ததால், 72 கிமீ நீளமுள்ள கடற்கரையில் உள்ள 48 மீனவ குடியிருப்புகளில் 200 மீட்டருக்கு மேல் கடற்கரையும், குடியிருப்புகளும் கடலுக்குள் சென்றுவிட்டது என்றும் இதனால் பெரும் அலைகள் வரும்போது, கடல்நீா் அருகிலுள்ள கடற்கரை மீனவ குடியிருப்புகளில் புகுந்துவிடுவதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், தங்களது மீன்பிடித் தொழிலும் பெருமளவு பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில், கிள்ளியூா் வட்டம் கீழ்மிடாலம், மிடாலம், இணையம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் 1144 ஹெக்டோ் நிலங்களில் அணு கனிமங்களை தோண்டி எடுக்க, மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை தொடா்ந்து கடற்கரைப் பகுதிகளில் சுமாா் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் 40 அடி ஆழம் வரை மணலைத் தோண்டி எடுப்பதால், மாவட்டத்தின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் புகாா் கூறியதுடன், அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரிய மணல் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவிய... மேலும் பார்க்க

அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!

அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யனை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் மாணவர் அணிச் செயலாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகிக... மேலும் பார்க்க

வேலு நாச்சியார் நினைவு நாள்: தவெக அலுவலகத்தில் விஜய் மரியாதை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான தமிழகத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக விளங்கும் நம்ம சென்னை!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாண... மேலும் பார்க்க

மதச்சார்பின்மையைக் காத்தவர் வாஜ்பாய்: முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!

நாட்டின் மதச்சார்பின்மையை பேணிக் காத்தவர் வாஜ்பாய் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் இன்று(டிச. 25) நாடு ம... மேலும் பார்க்க