செய்திகள் :

பொறுமை, ஈகை, அன்பை விதைத்தவர் இயேசு: முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

post image

தமிழக மக்களுக்கு கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியினை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி:

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்" என்று பொறுமையையும், "ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்" என ஈகையையும், "பகைவர்களையும் நேசியுங்கள்" எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான். போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது.

அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க: 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் கண்டெடுப்பு!

தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் சிறுபான்மையினர் நல ஆணையம், பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்ககம் எனப் பல திட்டங்களை கலைஞர் கருணாநிதி நிறைவேற்றி வந்துள்ளார். 

அவரது வழியில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும்,

  • ஜெருசலேம் செல்வதற்கான நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயாக உயர்வு. அதுவும் 2024 முதல் நேரடி மானியமாக அதனை வழங்க ஆணை.

  • 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களை மறுசீரமைக்க நிதியுதவி.

  • கரூர், மதுரை, தேனியில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கங்கள் தொடக்கம்.

  • தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4.32 கோடி ரூபாய் நிதியுதவி.

  • ஏராளமான கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து.

  • கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம். - முதலிய பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும் - சம உரிமையோடும் - சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் வலுவிழக்கும்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

ரஷிய போரில் இந்தியர் பலி...6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!

ரஷிய-உக்ரைன் போரில் பலியான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபரது உடல் 6 மாதங்கள் கழித்து அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (வயது-41)... மேலும் பார்க்க

12 வயது சிறுமி கொலை! முக்கிய குற்றவாளி கைது!

மகாராஷ்டிர மாநில தாணேவில் 12 வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.தாணே மாவட்டத்தின் கல்யான் பகுதியில், கடந்த திங்களன்று (டிச.23) வீட்டின் அருகில் விளையாடிக் கொண்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி!

கரீபியன் கடல்பகுதியிலுள்ள ஹெயிட்டி நாட்டின் மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் நேற்று (டிச.24) புதுப்பிக்கப்பட்ட பொதுமருத்துவமனையை திறக்க வருகை... மேலும் பார்க்க

1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் கயல் தொடர்!

கயல் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடர் எப்போதும் டிஆர்பியில் முதல் மூன்று... மேலும் பார்க்க

எம்எல்ஏ ,எம்பி, உள்ளாட்சித் தேர்தல்களை விஞ்சிய மன்னார்குடி வர்த்தக சங்க தேர்தல்!

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி வா்த்தக சங்க தோ்தல், 1 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 5 மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், 6 காவல் ஆய்வாளா்கள், தஞ்சாவூர், திருவாரூா் மாவட்டங்களை சோ்ந்த 300... மேலும் பார்க்க