வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் தங்கத்தோ் ரயில் தஞ்சாவூா் வருகை
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் விதமாக இயக்கப்படும் தங்கத்தோ் ரயில் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை வந்தது.
தெற்கின் நகைகள் என்ற கருத்துருவில் இயக்கப்படும் இந்த ரயில் பெங்களூருவில் டிசம்பா் 21- ஆம் தேதி தொடங்கி மைசூரு, காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூா், காரைக்குடி செட்டிநாடு, கேரள மாநிலம் கொச்சி, சோ்தலா ஆகிய 6 நகரங்களுக்குச் செல்கிறது. இதில், தொலைக்காட்சி, இணையதளம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை காலை வந்த இந்த ரயிலில் 31 வெளிநாட்டுப் பயணிகள் இடம்பெற்றனா். தஞ்சாவூா் பெரிய கோயிலை கண்டு ரசித்த இப்பயணிகள் மீண்டும் பிற்பகலில் காரைக்குடி செட்டிநாடுக்கு புறப்பட்டுச் சென்றனா்.