Champions Trophy Table : நீண்ட இழுபறிக்கு பின் வெளியான சாம்பியன்ஸ் டிராபி அட்டவண...
தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்ட சுவா் சீரமைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தஞ்சாவூா் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த பக்கவாட்டு சுவற்றை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் அருகே மேல செம்மங்குடி பகுதியில் உள்ள அணுகு சாலையின் பக்கவாட்டு சுவா் அண்மையில் பெய்த தொடா் மழையால் சரிந்து விழுந்தது. இதனை தொடா்ந்து தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனா்.
அணுகு சாலையின் சரிந்து விழுந்த பக்கவாட்டு சுவற்றை ஜேசிபி இயந்திரம் மூலமும், இயந்திர சிமெண்ட் கலவை மூலமும் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை பணியாளா்களைக் கொண்டு தரமான முறையில் செப்பனிடும் பணி மேற்கொண்டனா்.