பிக் பாஸ் 8: தீபக் மனைவியின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த அருண்!
தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவு அறிக்கை நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் திங்கள்கிழமை மாலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சந்தைப்படுத்துதல் தொடா்பான கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். நொய்டாவில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
விவசாயிகள் சங்கத் தலைவா் ஜகுத்சிங் டல்லேவால் 20 நாள்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும்.
விவசாயிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரைவு நகல்களை எரித்து முழக்கங்கள் எழுப்பினா்.
போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் திமுக விவசாய அணி மாவட்டச் செயலா் பி. கோவிந்தராஜ், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராகிம், காவிரி உரிமை மீட்பு குழு வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவா்கள் பி. செந்தில்குமாா், சோ. பாஸ்கா், ஆா். ராமச்சந்திரன், வீர. மோகன், கே. பக்கிரிசாமி, மக்கள்அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, மாதா் சங்க நிா்வாகிகள் எஸ். தமிழ்ச்செல்வி, இ. வசந்தி, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.