ஜாமா மசூதி ஆய்வறிக்கை ஜனவரியில் தாக்கல் செய்யப்படும்: சம்பல் நீதிமன்ற ஆணையர்
உ.பி. சம்பல் மாவட்டத்திலுள்ள ஜாமா மசூதியின் ஆய்வறிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஜனவரியில் தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.
முகாலய அரசர் பாபர் 1526 ஆம் ஆண்டு கோவிலை இடித்து ஜாமா மசூதியைக் கட்டியதாக ஹிந்துக்களின் தரப்புக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து நவ. 19 அன்று மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நவ. 24 அன்று நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது 5 பேர் உயிரிழந்தனா். மேலும் பலரும் காயமடைந்தனர்.
இதனால், அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!
இந்த நிலையில், நீதிமன்றத்தால் ஆணையராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரமேஷ் சிங் ராகவ் ஜாமா மசூதியின் ஆய்வறிக்கைக் குறித்து பேசியபோது, ”ஜாமா மசூதி தொடர்பான ஆய்வறிக்கை கிட்டத்தட்ட முடியும் தருவயில் இருக்கிறது. சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தன. அவை இன்று சரிசெய்யப்பட்டன.
இந்த அறிக்கை ஜனவரி 3 அல்லது 4 அன்று தாக்கல் செய்யப்படும். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஜன. 6 வரை நிறுத்திவைக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளதால் அதற்கு முன்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.