செய்திகள் :

``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்டு குறித்து அண்ணாமலை

post image
வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.

நிதி நிறுவனம் நடத்திவரும் செந்தில்குமார், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால், செந்தில்குமார் சம்பாதித்த பணத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பிருக்கிறதா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் உலாவின.

வருமான வரித்துறை

இந்த நிலையில், சென்னையில் நடந்த செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம், இந்த ரெய்டு தொடர்பாக செந்தில்குமார் தங்கள் உறவினரான, அவர் சம்பாதித்த பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, ``வருமான வரித்துறை சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் ஒருவர் வீட்டில் சோதனை நடத்தியது. அவர் என்னுடைய உறவினர்தான். எங்களின் சொந்தக்காரருக்கு அவரின் குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருக்கிறோம். நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஒரே கோயிலுக்குச் செல்வோம். நானும் ஜோதிமணி அக்காவும் உறவினர்தான். 20 வருடங்களாக அவரைத் தெரியும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன். ஒரே கோயிலுக்குப் போகிறவர்கள்தான்.

அண்ணாமலை

தி.மு.க-வில் கொங்குப் பகுதியில் இருக்கின்ற எல்லோரும் ஏதோவொரு வகையில் உறவினர்தான். நானும், கரூர் அ.தி.மு.க விஜய பாஸ்கரும் பங்காளிகள். கோவையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டவர்கள் பாதி பேர் எனது உறவினர்கள்தான். என்னுடைய குடும்பமா, என் ரத்த சொந்தமா என்றால் இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கும். ஆனால், கொங்குப் பகுதியில் எனக்கு தூரத்து உறவினருக்கோ, சொந்தக்காரருக்கோ ரெய்டு நடந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். என்னுடைய செல்வாக்கை இதில் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை." என்று தெரிவித்தார்.

மேலும், இதே செய்தியாளர்கள் சந்திப்பில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்தது தொடர்பாகப் பேசிய அண்ணாமலை, ``இதன் நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவது. மாநில அரசு இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் பிரச்னை கிடையாது. ஆனால், மத்திய அரசு இதை ஒரு காரணத்துக்காக கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அண்ணாமலை

கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் கல்வியின் தரத்தில் தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்யத் தொடங்கிவிட்டன. சுமாராகப் படிக்கும் மாணவர்களை அப்படியே வகுப்பில் உட்கார வைத்தால் எப்படி அவர்களை மேலே கொண்டுவருவது. அதற்காகத்தான் மத்திய அரசு இதைக் கொண்டுவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்துவருகிறது.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

`அம்பேத்கரை இழிவாக பேசிய அமித் ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!' - கரூர் எம்.பி ஜோதிமணி

கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணி, ``அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி இழிவாக பேசியுள்ளார். இது, நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேருவை நேரடியாகயும், அம்பேத்கரை மறைமு... மேலும் பார்க்க

கட்சிக்குள் இருக்கும் பிசுறுகளை ஊதிப் பறக்கவிட வேண்டும் - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சியில் `அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்ற நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ``நிர்வாகிகள் வெளியேறுவதால் வாக்கு சதவீதம் குறையாது, இன்னும் கட்சிக்கு... மேலும் பார்க்க

'எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிட்ட அண்ணாமலை' - கடுகடுக்கும் அதிமுக... பின்னணி என்ன?!

சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதையடுத்து பா.ஜ.க, தி.மு.க இடையே உறவு இருப்பதாக அ.தி.மு.க-வினர் விமர்சனம் செய்... மேலும் பார்க்க

DMK : 'உதயநிதியின் உதயநாளுக்காக வசூலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி?' - துரைப்பாக்கம் வியாபாரிகள் புகார்

சென்னை துரைப்பாக்கத்தில் 193 வட்ட திமுகவின் சார்பில் நடத்தப்படவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுகவினர் கறாராக பணம் வசூலிப்பதாக விகடனுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த... மேலும் பார்க்க

சென்னை: 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி-ஆகப் பதவி உயர்வு - பட்டியல் இதோ

தமிழக காவல்துறையில் ஒவ்வோர் ஆண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு 4 ஏ.டி.ஜி.பி-க்களுக்கு டி.ஜி.பி பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. இதுதவிர ஒரே ஒரு ஐ.ஜி-க்கு ஏ.டி.... மேலும் பார்க்க

`ஜெய் பீம் படத்துக்கு இல்லை; ஆனால் `புஷ்பா' கடத்தல்காரருக்கு தேசிய விருது’ - அமைச்சர் சீதாக்கா

புஷ்பா 2 திரைப்படம் வெளியான அன்று, ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்குக்கு முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்கச் சென்றதால் அங்கு திரண்ட ரசிகர் கூட்டத்தில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம் தெலங்கான... மேலும் பார்க்க