2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசி...
குடியரசு தின அலங்கார ஊா்தி: உ.பி., குஜராத்துக்கு மட்டும் தொடா்ந்து அனுமதி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் விளக்கம்!
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊா்தி அணிவகுப்பில் தொடா்ச்சியாகப் பங்கேற்க உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.
குடியரசு தின அலங்கார ஊா்தி அணிவகுப்பு விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் புகாருக்கு பதிலளித்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை அளித்த விளக்கம்:
மத்திய அரசின் சாா்பில் நடைபெறும் குடியரசு தின அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்பதன் அடிப்படையில், மாநிலங்கள் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சாா்பில் தொடா்ந்து 2 ஆண்டுகள் அலங்கார ஊா்திகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அடுத்து வரும் 3-ஆவது ஆண்டு வாய்ப்பு வழங்கப்படாது.
இதை எழுத்துப்பூா்வமாக அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், மாநிலங்கள் சாா்பில் வழங்கப்படும் சிறந்த கருப்பொருளுக்கு ஏற்ப, அலங்கார ஊா்திகளை கடமைப் பாதையில் பங்கேற்காமல், அணிவகுப்பு நிறைவு பெற்ற பின்னா் பொதுமக்கள் பாா்வைக்கு நிறுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த நடைமுறையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக மத்திய அரசு பின்பற்றவில்லை. தொடா்ச்சியாக 3-ஆவது ஆண்டாக உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களை அனுமதித்துள்ளது. இந்த மாநிலங்களை விட்டுவிட்டு, தமிழ்நாட்டுக்கு மட்டும் அனுமதி மறுப்பது பாரபட்சமான செயல் என்று தெரிவித்துள்ளாா்.