அந்தப் பருத்தி மூட்டை... புயல் சின்னம் குறித்த அப்டேட்
தமிழகத்தைக் காதலிப்பது போல இதயக் குறியீடு வடிவில் நிலவும் புயல் சின்னம் கிறிஸ்துமஸ் வரவிருக்கும் நிலையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் புயல் சின்னம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் கூறுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்திற்கு தன் இதயத்தை காட்டுகிறது என்று தலைப்பிட்டு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நமது பருத்தி மூட்டை குறைந்த காற்றழுத்தம் (91 பி) மேற்குப் பக்கமாக மேலே இழுத்துச் செல்லப்பட்டு பிறகு, அங்கு திறந்த மத்திய கடலில் குறைந்த காற்றழுத்தத்தைக் கைவிட்டுவிட்டது.
பின்னர் அந்த புயல் சின்னத்தில் ஏற்பட்ட விரிசலால் காற்றும் வெளியேறி, மிகக் குறைந்த காற்றழுத்த சுழற்சியாக மாறியது எல்எல்சி). குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கு உதவ யாருமே இல்லாததால், யு டர்ன் அடித்து தமிழகத்துக்கே பலவீனமான காற்றழுத்தமாக திரும்பி வந்தது.
தமிழகம் எப்போம எந்த ஒரு காற்றழுத்த தாழ்வு அழுத்தத்தையும் கைவிடாது, அதுபோலவே திரும்பி வந்த குறைந்த காற்றழுத்தத்தையும் அன்புடன் வரவேற்கிறது, தமிழகம் காட்டிய அன்புக்கு பதிலாக குறைந்த காற்றழுத்த தாழ்வு, இதய வடிவில் திரண்டு நின்றி தனது நன்றியை வெளிப்படுத்துகிறது.
டிச. 26 மற்றும் 27 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகத்தில் இயல்பான அதே வேளையில் ரசிக்கும் வகையிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்றும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.