பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்ச...
திருவப்பூா் மேம்பாலத் திட்டத்தில் வீடுகள் இடிபடாமல் மாற்றம் செய்யக் கோரிக்கை
திருவப்பூா் மேம்பாலத் திட்டத்தில் குடியிருப்பு வீடுகள் இடிபடாமல் மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாநகரம், திருவப்பூா் பகுதியைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: திருவப்பூரில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுமாா் 50 குடியிருப்புகளையும் அகற்றப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் இருந்து 30 அடி தொலைவில் எங்களின் குடியிருப்புகள் உள்ளன. அரசு பட்டா வாங்கியிருக்கிறோம். வங்கியில் கடன் வாங்கி வீடுகளைக் கட்டியிருக்கிறோம். அந்தக் கடன் கூட இன்னமும் முடியவில்லை.
வீடுகளை இடித்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, வீடுகளை இடிக்காமல் பால வரைபடத்தை நேராக மாற்றி அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.