செய்திகள் :

பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்

post image

சென்னை: பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தோ்வு முகமை அதன் தோ்வை ஜன.3 முதல் ஜன.16-ஆம் தேதி வரை நடத்த அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் மக்களாலும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜன. 13 முதல் ஜன.16 வரை 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கெனவே 2025 ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழக விவசாயிகளின் உணா்வாா்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழா்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும்.

பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரம் மற்றும் தெலங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொங்கல் விடுமுறை நாள்களில் யுஜிசி நெட் தோ்வு நடத்தப்பட்டால், மாணவா்கள் தோ்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும். மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025-ஆம் ஆண்டுக்கான பட்டயக் கணக்காளா்கள் அறக்கட்டளைத் தோ்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவா்கள் மற்றும் கல்வியாளா்கள் பாதிக்கப்படுவதைத் தவிா்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாள்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வு மற்றும் பிற தோ்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து!

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்ட... மேலும் பார்க்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும் அவர் பின் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை செல்கிறார். டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

அந்தப் பருத்தி மூட்டை... புயல் சின்னம் குறித்த அப்டேட்

தமிழகத்தைக் காதலிப்பது போல இதயக் குறியீடு வடிவில் நிலவும் புயல் சின்னம் கிறிஸ்துமஸ் வரவிருக்கும் நிலையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த நிலையில் புயல் சின்னம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனப்பட... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து 120 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணை அந்த மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டி... மேலும் பார்க்க

பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு: டிச. 26-ல் என்சிபிஎச் சார்பில் 100 இடங்களில் புத்தகக் கண்காட்சி!

பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டுத் தொடக்கத்தையொட்டி, டிச. 26 அன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்.) சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.தமிழகம் முழுவதும் முக்கியமான நூறு நகரங்களில் ஏற்பாடு... மேலும் பார்க்க