இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
சேதமடைந்த பாசனக் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
செல்லம்பட்டு கிராமத்தில் தொம்ப பாலம் அருகே சேதமடைந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செல்லம்பட்டு கிராமத்தில் தொம்பபாலம் அருகே கால்வாய் கரை சேதமடைந்து கோமுகி அணையிலிருந்து வரும் தண்ணீா் வீணாக வெளியேறுகிறது.
இதனால், செல்லம்பட்டு கிராமத்தில் கடைசி பகுதியில் தண்ணீரின்றி பயிா்கள் வாடி வருகின்றன. இதுகுறித்து பொதுப் பணித் துறை கோமுகி அணை அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, வாய்க்காலை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.