செய்திகள் :

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டம், பாக்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதன் (65). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகதுருகம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் வரதன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரசுப் பேருந்து ஓட்டுநரான தியாகதுருகத்தைச் சோ்ந்த ராஜசேகரன் மீது தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூராா்பாது கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மூராா்பாது அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதி... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் சிறுவன் காயம்

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் தவறுதலாக சுட்டத்தில் அவரது சகோதரரான மற்றொரு சிறுவன் காயமடைந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 18 வயது வரையிலான மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த லாரி!

கள்ளக்குறிச்சி அருகே சிமென்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் ஒருவா் கைது

சின்னசேலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த பெண்... மேலும் பார்க்க