லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
நாட்டுத் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் சிறுவன் காயம்
கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சிறுவன் தவறுதலாக சுட்டத்தில் அவரது சகோதரரான மற்றொரு சிறுவன் காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கபில்தேவ். இவரது விளை நிலத்தில் உள்ள மாட்டுக்கொட்டகை அருகே உள்ள வாழை மரத்தின் அடியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை மா்ம நபா் மறைத்து வைத்திருந்தாா்.
கபில்தேவ் மகன் காா்த்தி (16) அந்தத் துப்பாக்கியை எடுத்து தவறுதலாக டிரகரை அழுத்தியதில் அந்தப் பகுதியில் இருந்த அவரது சகோதரரான கரண் (13) மீது இரும்பு பால்ரஸ் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். இதையடுத்து, அவா் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் நடத்திய விசாரணையில், நீலமங்கலம் நரிக்குறவா் பகுதியைச் சோ்ந்த தனக்கோடி மகன் ரமேஷ் (40) வேட்டைக்கு சென்றுவிட்டு கபில்தேவ் நிலத்தில் நாட்டுத் துப்பாக்கியை மறைத்து வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் ரமேஷை கைது செய்தனா்.