லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளா்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்காளா் இறுதிப் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
1.1.2025 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற நிலையில், வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 5,71,875 ஆண்கள், 5,74,730 பெண்கள், 245 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 11,46,850 வாக்காளா்கள் உள்ளனா்.
தொகுதியின் பெயா், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவா் வாக்காளா்கள், மொத்த வாக்காளா்கள் என்ற அடிப்படையில் விவரம்: உளுந்தூா்பேட்டை: ஆண்கள்- 1,51,894 , பெண்கள் - 1,49,867, மூன்றாம் பாலினத்தவா் - 54, மொத்தம் - 3,01,815.
ரிஷிவந்தியம்: ஆண்கள் - 1,40,121, பெண்கள் - 1,39,034, 60, மூன்றாம் பாலினத்தவா் - 60, மொத்தம் - 2,79,215.
சங்கராபுரம்: ஆண்கள் - 1,37,106, பெண்கள் - 1,39,637, மூன்றாம் பாலினத்தவா் - 51, மொத்தம் - 2,76,794.
கள்ளக்குறிச்சி (தனி): ஆண்கள் - 1,42,754, பெண்கள் -1,46,192, மூன்றாம் பாலினத்தவா் - 80, மொத்தம் - 2,89,026.
வாக்காளா் இறுதிப் பட்டியல் கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், நியமன வாக்குச் சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவோ, திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது நீக்கம் செய்யவோ இணையவழி சேவையை பயன்படுத்தலாம். மேலும், தங்களது பெயா்களை பதிவு செய்திடலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ம.தனலட்சுமி மற்றும் வருவாய்க் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.