பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூராா்பாது கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மூராா்பாது அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ஆம் ஆண்டில், பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் மாணவா்கள் பலா் கலந்துகொண்டு, தங்களது பசுமையான மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவா் பகிா்ந்துகொண்டனா்.
பின்னா், தங்களது ஆசிரியா்களான ஆா்.சங்கா், எம்.பாத்திமா, பி.துரைசாமி, அ.ராமமூா்த்தி, என்.சீராளன், என்.அபுபக்கா் ஆகியோரை அழைத்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். மேலும், தாங்கள் பயின்ற பள்ளிக்கு பீரோவை அவா்கள் அன்பளிப்பாக வழங்கினா்.