தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
ஃபென்ஜால் புயல்: சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிவாரணம்!
ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஃபென்ஜால் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.