அதிமுகவில் இணக்கம் இல்லையா: முன்னாள் அமைச்சா் மறுப்பு
அதிமுகவில் இணக்கமில்லாத இல்லாத சூழல் இருப்பதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. இது ஊடகங்கள் செய்யும் வேலை என்று முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் கூறினாா்.
வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
2026-இல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா்.
அதிமுகவில் இணக்கம் இல்லாத சூழல் இருப்பதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு :
சுடச்சுட செய்திகளை தருவதாக நினைத்து செய்தியாளா்கள் செய்யும் வேலை தானே தவிர அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.
அதிமுக ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி அதிகாரத்துக்கு வரும் ஆற்றலை பெற்ற கட்சி.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடே வெள்ள பாதிப்புகள் அதிகரிக்க காரணம் என்றாா் அவா்.