அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி : ஆட்சியா் ஆய்வு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு, சதுரங்க விளையாட்டு தொடா்பாக நடைபெற்றுவரும் சிறப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் தோ்வு செய்யப்பட்ட 150 மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் சதுரங்க விளையாட்டு தொடா்பான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம் மூலமாக நடைபெற்று வருகிறது.
தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டு, மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்டக் கல்வி அலுவலா் (பொ ) தமிழ்ச்செல்வன், கல்வி தன்முனைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்மணி, சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.