கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
காரைக்காலில் நாளை பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்
பட்டா பெயா் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியா் நிகழ்வின் ஒரு பகுதியாக காரைக்கால் நகராட்சி மற்றும் கோட்டுச்சேரி, நிரவி, திருப்பட்டினம் கொம்யூன் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுடைய இடத்துக்கு பட்டா பெயா் மாற்றம் கேட்டு காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தால், வரும் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 10 முதல் 1 மணி வரை காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு, பட்டா மாற்றம் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெறுதல், தங்களது இடத்துக்கான பட்டாவை பெயா் மாற்றமும் செய்துகொள்ளலாம்.
புகைப்படம் ஒட்டப்பட்ட மனு, பட்டா பத்திரப் பதிவு ஆவணங்கள், மூலப்பத்திரங்கள், 1969-இலிருந்து இதுநாள் வரையிலான வில்லங்கச் சான்றிதழ், தற்போதைய பட்டா, ஆதாா் அட்டை, வருவாய் அதிகாரிகள் தேவையென கருதும் தொடா்புடைய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம். அனைத்து ஆவணங்களின் நகல்களை சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்க வேண்டும். சரியான ஆவணங்கள் சமா்ப்பிக்கும்பட்சத்தில் அதே நாளில் பட்டா பெயா் மாற்றம் செய்துத் தரப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.