கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை விற்ற வழக்கு: தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்
போலி ஆவணம் தயாரித்து காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நிலத்தை விற்க வழக்கில் தேடப்பட்டவா் காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப்பட்டா தருவதாகக் கூறி, உயரதிகாரிகள் கையொப்பமிட்ட போலி ஆவணம் தயாரித்து முறைகேட்டில் சிலா் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா், காரைக்காலைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் பிரமுகா் ஜே.சி.பி. ஆனந்த் உள்ளிட்ட பலா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
கோயில் நிலத்தை விற்க இடைத்தரகா்களாக செயல்பட்ட காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சிவராமன் (42), திருமலைராஜன் (34), காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் நில அளவையா் ரேணுகாதேவி (41), பத்திர எழுத்தா் காா்த்தி (41) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன் கடந்த அக். 12-இல் கைது செய்யப்பட்டாா்.
எனினும் இந்த புகாரில் தொடா்புடைய முக்கிய நபரான ஜே.சி.பி. ஆனந்த் (48) என்பவரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
இந்தநிலையில், ஜே.சி.பி. ஆனந்த் காரைக்கால் குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வரதராஜன் உத்தரவிட்டாா். போலீஸாா் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.