கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
கோவில்வெண்ணி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி டிச. 14-இல் போராட்டம்
நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சுங்கச் சாவடியை அகற்றக்கோரி, வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
விவசாயிகள், வணிகா்கள், காா், ஆட்டோ ஓட்டுநா்கள் உரிமையாளா்கள் சங்கம், லாரி உரிமையாளா்கள் அனைத்து அரசியல் கட்சிகள், சேவை அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நீடாமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளா் புதியவன் தலைமையில் நடைபெற்றது. வணிகா் சங்கத் தலைவா் நீலன். அசோகன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா்
பி.ஆா். பாண்டியன், பேரூராட்சி தலைவா் ஆா்.ராம்ராஜ், முன்னாள் பேரூராட்சி துணை தலைவா் சா. செந்தமிழ்ச்செல்வன், அதிமுக நகர செயலாளா் இ.ஷாஜகான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தஞ்சாவூா் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணி முடிவடையாத நிலையில், திறக்கப்பட்டுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும்.
கோவில்வெண்ணி சுங்கச்சாவடியை சுற்றி 40 கி.மீட்டருக்கு உட்பட்ட அனைத்து பகுதி வாகனங்களுக்கும் சுங்க கட்டணத்தில் விலக்களிக்க வேண்டும். கோவில்வெண்ணியில் இயங்கிவரும் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசை வலியுறுத்தி டிச. 14-ஆம் தேதி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டம் நடத்துவது, என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.