ராகுல் தடுத்து நிறுத்தம்: மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்!
திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் கடைவீதியில் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான 5,688 சதுர அடி நிலம் திருவாரூரைச் சோ்ந்த மன்சூா் அலி என்ற வாடகைதாரரின் பராமரிப்பில் இருந்தது. இதற்கிடையே, இந்த இடத்தை வேறொருவா் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு 2020-ல் மன்சூா் அலி வழக்கு தொடா்ந்தாா்.
இதைத்தொடா்ந்து, அக்டோபரில் அளிக்கப்பட்ட தீா்ப்பில், சம்பந்தப்பட்ட 5,688 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பு தாரரிடமிருந்து மீட்டு வாடகைதாரரிடம் ஒப்படைக்க இந்து சமய அறநிலைதுறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை அலுவலா்கள், காவல் துறை பாதுகாப்புடன் நிலத்தை மீட்டு வாடகைதாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இந்த இடம் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையையும் வைத்தனா்.