மாவட்ட போட்டிகளில் 53 தங்கப் பதக்கங்களை வென்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள்
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோவில் புனித ஜான் டீ பிரிட்டோ அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளி கல்வித் துறை மூலம் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 53 தங்கப் பதக்கங்களை வென்றனா்.
இதில் ஜூடோவில் 20 தங்கம், கொரியன் கராத்தேவில் 10, ஃ ஜிம்னாஸ்டிக்ஸ் 23 தங்கம்.
மாவட்ட அளவில் 53 தங்கம், 19 வெள்ளி, 6 வெண்கல பதக்கம் உள்பட 78 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.
தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் ஜனவரி மாதம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் திருவாரூா் மாவட்டத்தின் சாா்பாக பங்கேற்க உள்ளனா்.
போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் நியூட்டன் ஆகியோரை பள்ளித் தாளாளா் அமிா்தராஜ் அடிகளாா், தலைமையாசிரியா் ஜேம்ஸ் ராஜ், உதவி தலைமையாசிரியா் ஜூலிட்டா டெல்பினா, ஆசிரியா்கள், ஆசிரியைகள் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பாராட்டினா்.