செய்திகள் :

புதிய உயர்மட்ட பாலம் சேதமடைந்தது ஏன்? - தமிழக அரசு அறிக்கை!

post image

திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரசால் கட்டப்பட்ட ரூ. 16 கோடி பாலம், கடந்த செப்டபரில் மாதம் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டே மாதங்களில் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சமூக ஊடகங்களில் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாள்களில் ஃபென்ஜால் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்துள்ளது.

பாலத்தின் நீளம் - 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் – 12 மீ, ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் - 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் - 7 மீ.

இதையும் படிக்க: கனமழை எதிரொலி: எங்கெல்லாம் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் (Design Discharge) 54,417 கன அடி. திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது.

தற்போது, ஃபென்ஜால் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு   பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் திறந்து வைத்தார்

உயர்கல்வித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 21 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் புதன்கிழமை திறந்து... மேலும் பார்க்க

மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட மாணவரை தாக்கிய சக மாணவர்கள்: அச்சத்தில் மக்கள்

மதுரை: மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 2 மாணவர்களை கும்பலாக சேர்ந்து சக மாணவா்கள் தாக்குவது மற்றும் கற்களை வீசும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மா... மேலும் பார்க்க

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,274 நீர் நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: தொடா் மழை காரணமாக , திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,274 நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூா் மாவட்டத்தில் ஃபென்ஜான் புயலால் தொடா்ந்து ... மேலும் பார்க்க

மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்: வைரலாகும் விடியோ!

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதமடைந்தது. இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.கோவ... மேலும் பார்க்க

அகழாய்வில் மணிகள், வளையல்கள் கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால மணிகள், சங்கு வளையல்கள் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிர... மேலும் பார்க்க

பால்கனி இடிந்து விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ஆட்டோ!

சென்னை: சென்னை பெரம்பூரில் 70 ஆண்டு பழமையான வீட்டின் முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. சென்னை பெரம்பூர் த... மேலும் பார்க்க