செய்திகள் :

அகழாய்வில் மணிகள், வளையல்கள் கண்டெடுப்பு

post image

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால மணிகள், சங்கு வளையல்கள் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க:தில்லி எல்லையில் ராகுல் கார் தடுத்து நிறுத்தம்!!

3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், தங்க மணி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டன.

முன்னோா்கள் தொழில்கள் நடந்ததற்குச் சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்களும் கிடைத்துள்ள நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

லட்சுமி தொடரில் இருந்து விலகிய சஞ்சீவ்! இனி இவர்தான்!

லட்சுமி தொடரில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெங்கட் விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.இவர்... மேலும் பார்க்க

ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி, 29 முடிவுற... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புயல் வெள்ளம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிவாரணம்!

ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஃபென... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(டிச. 4) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்காக மும்பையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ்.மகாராஷ்டிரா முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்... மேலும் பார்க்க