கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
உதகையில் பிா்சா முண்டா பிறந்த நாள் விழா
ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய பழங்குடி இனத்தைச் சோ்ந்த பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழா உதகையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழாவை பழங்குடியினா் கௌரவ தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தோடா் பழங்குடியின கிராமமான பகல்கோடு மந்தில் பழங்குடியின கௌரவ தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் பிரீதம் பியஸ்வந்த் பங்கேற்று, பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டைகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா் மரக்கன்றுகளை நடவு செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ முகாம், பழங்குடியின சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், தோடா் பழங்குடியின பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.