Sarfaraz Khan: 'முதலில் அவரைத் தோற்க விடுங்கள்..!' - சர்பராஸ் கானுக்கு கங்குலி ஆ...
சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!
மும்பை: இன்றைய முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கிய சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது.
அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகளின் தொடர் பின்னடைவு மற்றும் அமெரிக்க சந்தைகளிலிருந்து வரும் பலவீன போக்குகள் ஆகிய காரணங்களால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றும் சரிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 156.72 புள்ளிகள் குறைந்து 77,423.59 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 64.25 புள்ளிகள் குறைந்து 23,468.45 புள்ளிகளாக இருந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது. ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
இதையும் படிக்க: டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 14-ஆம் தேதி) ரூ.1,849.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இந்திய பங்குகளின் உயர் மதிப்பீடு, சீனாவுக்கான அதிகரித்து வரும் ஒதுக்கீடுகள் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க டாலர் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை ரூ.22,420 கோடியை வெளியேற்றியுள்ளனர்.
தேசிய பங்குச் சந்தை உச்சத்திலிருந்து 10.4 சதவிகிதம் சரிந்தும், நிலையான மீட்சிக்கான அறிகுறிகள் இதுவரையிலும் ஏதும் தென்படவில்லை.
இடைவிடாத எஃப்ஐஐ விற்பனை, நிதியாண்டு 2025-க்கான பெரும்பாலான பங்குகளின் வருவாய் குறைப்பு மற்றும் அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வருவதால், நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார் ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு ஆலோசகரான வி.கே. விஜயகுமார்.
ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்த நிலையில் டோக்கியோ சற்று சரிந்தது. அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிந்து முடிவடைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.51 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 71.40 டாலராக வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் முடிவில் 241.30 புள்ளிகள் சரிந்து 77,339.01 புள்ளிகளும், நிஃப்டி 78.90 புள்ளிகள் சரிந்து 23,453.80 ஆக நிலைபெற்றது.