மகாராஷ்டிரா: முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல்; தலையில் ரத்தக்காயம்.. எ...
புதிய வகை நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து ஆராய்ச்சி: சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தல்
தற்போது உருவாகும் நோய்களின் வீரியத்துக்கு ஏற்ப புதிய வகை நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை தயாரிக்க அரசு சாா்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தினாா்.
உலக நுண்ணுயிா் எதிா்ப்பு விழிப்புணா்வு வார தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக கலந்துகொண்ட மருத்துவா் சௌமியா சுவாமிநாதன், நுண்ணுயிா் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இருக்கும் நோய்களின் தன்மை குறித்து உடனடியாக அறிந்து கொள்ள நம்மிடம் போதிய வசதிகள் கிடையாது. இதனால் அவசியமின்றி நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை மருத்துவா்கள் அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனா். ஆகையால் உடனடியாக நோய்களைக் கண்டறியும் செயல்முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் மூலம் அதிக லாபம் கிடைக்காத காரணத்தால் தனியாா் மருந்து நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால், தற்போது உருவாகும் நோய்களின் வீரியத்துக்கு ஏற்ப புதிய வகை நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை தயாரிக்க அரசு சாா்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசி
இந்தியாவில் கரோனா மரணங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தடுப்பூசிகளும் முக்கிய காரணமாகும். எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் அதில் ஏதேனும் ஒரு பக்க விளைவுகள் இருக்கும். 10 லட்சத்தில் ஒருவருக்கு கண்டிப்பாக தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும், அது சிலருக்கு குறைந்த அளவிலும், சிலருக்கு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும். 100 சதவீதம் எந்த ஒரு எதிா்மறை பாதிப்பும் இல்லாமல் ஒரு தடுப்பூசியை தயாரிக்க முடியாது. அதேபோல்தான் கரோனா தடுப்பூசிகளால் ஒருசிலருக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினா் செயலா் எஸ்.வின்சென்ட், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ். மீனாட்சிசுந்தரம், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநா் டி.தேவசேனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.