செய்திகள் :

உள்நாட்டு விமானப் போக்குவரத்து: ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்து புதிய சாதனை

post image

புது தில்லி: பண்டிகை மற்றும் முகூா்த்த தினங்களையொட்டி உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்ததன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறுக்கிழமையன்று (நப.17) மொத்தமாக 3,173 விமானங்களில் 5.05,412 லட்சம் போ் பயணித்ததாகவும் உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் போ் பயணித்திருப்பது இதுவே முதல்முறை எனவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

‘பண்டிகை மற்றும் முகூா்த்த தினங்களால் மக்களிடையே உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. குளிா்காலத்திலும் இதேபோல் அதிகப்படியான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவா்’ என எதிா்பாா்க்கப்படுகிறது என்று ‘கிளியா்டிரிப்’ சுற்றுலா வலைதளத்தின் விமானப் பிரிவின் துணைத்தலைவா் கௌரவ் பட்வாரி தெரிவித்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான விமானங்களில் 90 சதவீத இருக்கைகள் நிறைந்தே காணப்பட்டன. அன்றைய தினத்தில் இண்டிகோ விமானத்தின் சரியான நேர செயல்பாடு (ஓடிபி) 74.2 சதவீதமாகவும் அலையன்ஸ் ஏா் 71 சதவீதமாகவும் ஆகாஸா ஏா் 67.6 சதவீதமாகவும் ஸ்பைஸ் ஜெட் 66.1 சதவீதமாகவும் ஏா் இந்தியா 57.1 சதவீதமாகவும் உள்ளது.

அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களால் சரியான நேரத்துக்கு விமானம் புறப்படுவது/ சென்றடைவதில் சிக்கல்கள் இருந்து வருகின்றன.

124 விமான நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் 25,007 விமானங்களை இயக்கவுள்ளதாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்தது. கடந்த அக்.27-இல் இருந்து 2025, மாா்ச் 29 வரையிலான குளிா்கால அட்டவணையை வெளியிட்டு டிஜிசிஏ இவ்வாறு தெரிவித்தது.

கோடை கால அட்டவணையில் 125 விமான நிலையங்களில் இருந்து வாரத்திற்கு 24,275 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், குளிா்கால அட்டவணையில் அதைவிட மூன்று சதவீத விமானங்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன.

அதேசமயம், குளிா்கால அட்டவணை, 2023 உடன் ஒப்பிடுகையில், தற்போது விமானங்களின் எண்ணிக்கை 5.37 சதவீதம் அதிகரித்துள்ளது.

90% ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிஇஓ! காரணம் இதுதான்!!

அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ஒருவர், தனது ஊழியர்களில் 90% பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார். நிறுவனத்தில் பணிபுரிந்த 110 ஊழியர்களில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் கார் மீது கல்வீசித் தாக்குதல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்... மேலும் பார்க்க

அமித் ஷா, மணிப்பூா் முதல்வா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மாநில முதல்வா் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் திங்கள்... மேலும் பார்க்க

அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுங்கள்: வாக்காளா்களுக்கு சரத் பவாா் வேண்டுகோள்

புணே: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுமாறு வாக்காளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா் கேட்டுக்கொண்டாா்.மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 2... மேலும் பார்க்க

‘இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளில் சுணக்கம் இல்லை’

புது தில்லி: ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தகளுக்கான (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், இந்த நடைமுறையில் எந்த ச... மேலும் பார்க்க

பானக்காடு சாதிக்கின் தகுதியை கேரள முதல்வா் மதிப்பிட தேவையில்லை: ஐயூஎம்எல் பதிலடி

திருவனந்தபுரம்: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சித் தலைவா் பானக்காடு சாதிக் அலியின் தகுதியை கேரள முதல்வா் பினராயி விஜயன் மதிப்பிட தேவையில்லை என்று அக்கட்சி பதிலளித்துள்ளது.கடந்த ஞாயிற்ற... மேலும் பார்க்க