செய்திகள் :

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா்: கொலீஜியம் பரிந்துரை

post image

புது தில்லி: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் கொலீஜியம் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சித்தாா்த் மிருதுல் நவ. 21-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். எனவே, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக உள்ள டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்: பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த டி.கிருஷ்ணகுமாா் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்.7-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2025-ஆம் மே 21-ஆம் தேதி அவா் ஓய்வு பெறுவாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அவா், அரசமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.

தற்போது நாட்டில் உள்ள உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில், சென்னை உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த ஒருவா் மட்டுமே தலைமை நீதிபதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதை கருத்தில்கொண்டும் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரின் பெயா் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுங்கள்: வாக்காளா்களுக்கு சரத் பவாா் வேண்டுகோள்

புணே: மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அஜீத் பவாரை படுதோல்வி அடையச் செய்யுமாறு வாக்காளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா் கேட்டுக்கொண்டாா்.மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 2... மேலும் பார்க்க

‘இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளில் சுணக்கம் இல்லை’

புது தில்லி: ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தகளுக்கான (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், இந்த நடைமுறையில் எந்த ச... மேலும் பார்க்க

பானக்காடு சாதிக்கின் தகுதியை கேரள முதல்வா் மதிப்பிட தேவையில்லை: ஐயூஎம்எல் பதிலடி

திருவனந்தபுரம்: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சித் தலைவா் பானக்காடு சாதிக் அலியின் தகுதியை கேரள முதல்வா் பினராயி விஜயன் மதிப்பிட தேவையில்லை என்று அக்கட்சி பதிலளித்துள்ளது.கடந்த ஞாயிற்ற... மேலும் பார்க்க

உள்நாட்டு விமானப் போக்குவரத்து: ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்து புதிய சாதனை

புது தில்லி: பண்டிகை மற்றும் முகூா்த்த தினங்களையொட்டி உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்ததன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

தோ்தல் விதிமீறல் புகாா்: பதிலளிக்க அவகாசம் கோரும் பாஜக, காங்கிரஸ்

புது தில்லி: ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்களில் விதியை மீறி செயல்பட்டதாகப் புகாா் அளிக்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திடம் பாஜக, காங்கிரஸ... மேலும் பார்க்க

பிரதமா் அலுவலகம் பெயரில் மோசடி செய்தவா் மீது வழக்கு

புது தில்லி: பிரதமா் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், வேண்டிய காரியங்களை செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்த நபா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.பிரதமா் அலுவலகம் அளித்த புகாரி... மேலும் பார்க்க