செய்திகள் :

பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ் லாபம் இரட்டிப்பு!

post image

புதுதில்லி: பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.டி.சி. இண்டஸ்ட்ரீஸ் (ப்ரிசிஷன் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 2024 செப்டம்பா் காலாண்டில், இரு மடங்காக அதிகரித்து ரூ.17.3 கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

முந்தைய 2023-24 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.8 கோடியாக பதிவு செய்தது என்று நிறுவனம் தனது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.60.3 கோடியிலிருந்து 34 சதவிகிதம் உயர்ந்து ரூ.80.8 கோடியாக இருந்தது.

அமெரிக்காவிலிருந்து அதிநவீன ஹாட் ரோலிங் மில் ஒன்றை நாங்கள் கையகப்படுத்தியதால் எங்கள் உற்பத்தி திறன் கணிசமாக மேம்படும். இது விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான மேம்பட்ட டைட்டானியம் அலாய் தகடுகள் மற்றும் தகடுகளைத் தயாரிக்க அனுமதிக்கும்.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு 1.13% உயர்ந்து ரூ.11,191.80 ஆக முடிந்தது.

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

மும்பை: இன்றைய முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கிய சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது.அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகள... மேலும் பார்க்க

டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அதிக மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரம் சுமார் ரூ.1,65,180.04 கோடி இழப்பை சந்தித்தன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய... மேலும் பார்க்க

559 மெகாவாட் மின்சாரம் வழங்க குஜராத் உர்ஜா விகாஸ் உடன் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஒப்பந்தம்!

கொல்கத்தா: குஜராத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் உடன் 559 மெகாவாட் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது தாமோதர் வேல... மேலும் பார்க்க

கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய எஸ்பிஐ

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன்களுக்கான (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது. இதுகுறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெ... மேலும் பார்க்க

ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் உயா்வு

கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் நிகர லாபம் 6 சதவீதம் உயா்ந்துள்ளது. இத... மேலும் பார்க்க

பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% உயர்வு!

புதுதில்லி: பால் தயாரிப்பு நிறுவனமான, பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் மாதம் காலாண்டில், 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.29.21 கோடி உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர லாபம்... மேலும் பார்க்க