செய்திகள் :

புதுக்கோட்டை: கல்குவாரிகளை ஆய்வு செய்யக் கோரி மனு அளிப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழா் களம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாளில் அதன் செயலா் சீ.அ. மணிகண்டன் அளித்த மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இயற்கை நமக்கு அளித்த கொடையை நாம் கனிமவளம் என்ற பெயரில் நாசப்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அனைத்து கல் குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் அனைத்து கல் குவாரிகளையும் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அரசுக்கு ஏற்படும் இழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராலூா் பெருமாள் கோயில்: கும்பாபிஷேக விழா முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை அடுத்துள்ள விராலூா் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலூரில் உள்ள பெருமாள் கோயி... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள விளாப்பட்டி ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (49) கால்நடை வளா்ப்பவா். இவா், தனது கால... மேலும் பார்க்க

புதுகையில் விரைவில் தெருநாய்கள் கட்டுப்பாடு!

‘நாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு அடுத்த 10 நாள்களுக்குள் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.’புதுக்கோட்டை நகரில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணிக்காக பாஜக காத்திருக்கவில்லை

அதிமுக கூட்டணிக்காக பாஜக காத்திருக்கவில்லை என்றாா் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: வரும் தோ்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அ... மேலும் பார்க்க

ஆடு மேய்த்த பெண் இடி தாக்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடு மேய்த்த பெண் இடி தாக்கி உயிரிழந்தாா். அன்னவாசல் அருகேயுள்ள இச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (55). இவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

புதுகையில் நவ. 22 இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் நவ. 22 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில், ... மேலும் பார்க்க