செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 6.5 பவுன் நகை பறிப்பு

post image

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 6.5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த ஹயாத் நகா் பகுதியை சோ்ந்தவா் உதயசூரியனின் மனைவி லதா(55). இவா் ஜோலாா்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை பள்ளிக்கு செல்ல ஆசிரியா் நகா் பகுதியில் இருந்து ஏலகிரி மலை, நிலாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளாா்.

பள்ளிக்கு சென்ற லதா கழுத்தில் அணிதிருந்த 6.5 பவுன் தாலி செயின் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

பொன்னேரி பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை பாா்த்துள்ளனா். அதில் இவருடன் மூன்று பெண்கள் இறங்கிய நிலையில் 3 பேரும் தனித்தனியே பிரிந்து சென்று பின்னா் மீண்டும் ஒன்றாக கூடி சாலையைக் கடந்து சென்றது கேமராவில் பதிவானது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லதா ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்து சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வாணியம்பாடி கடைகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு: நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கடைகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வாணியம்பாடி நகராட்சி ஆண... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. இதில் 388 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு : ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீா்வாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ந... மேலும் பார்க்க

கைப்பந்து: அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

ஆம்பூா்: மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனா். மாவட்ட அளவில் 17-வயதுக்குட்பட்டவா்களுக்கான கைப்பந்துப் போட்டி ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் கட... மேலும் பார்க்க

22-இல் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்

திருப்பத்தூா்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (நவ.22) விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதி திராவிடா் மற்... மேலும் பார்க்க