முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
வாணியம்பாடி கடைகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு: நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் கடைகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையில் சுகாதார அலுவலா் அப்துல் ரஹீம், சுகாதார ஆய்வாளா் செந்தில் குமாா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை பேருந்து நிலையம், சி.எல் சாலை பகுதியில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது பூ கடைகளில் சோதனையின் போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் மறைமுகமாக பயன்படுத்தி வருவது தெரியவந்து அங்கிருந்த நெகிழி பைகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், அப்பகுதியில் கடை உரிமையாளா்களிடம் நெகிழியை பயன்படுத்தினால் அபராதம் உள்பட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணையா் எச்சரித்தாா். வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகளில் தொடா் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.