சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு- உச்சநீதிமன்ற...
வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
தற்போது அரசாணைப்படி மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரா் அரசு மற்றும் தற்காலிக அரசு பணி அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எந்த விதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.
மனுதாரா் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது.
இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது. மேலும் வேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெற்று கொண்டிருத்தல் கூடாது.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 1.7.2019 முதல் 30.9.2019 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பொதுப்பிரிவினா் மற்றும் 1.7.2023 முதல் 30.9.2023 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவு பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் நடப்பு காலாண்டுக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ‘சி’பிளாக் தரைதளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக நாட்களில் நேரில் வருகை புரிந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது ட்ற்ற்ல்ள்/ண்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் (ா்ழ்) ஜ்ஜ்ஜ்.ண்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நேரடியாகவும் விண்ணப்ப படிவத்தினை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக நாள்களில் விண்ணப்ப படிவத்தில் தெரித்தவாறு பக்க எண் 7 உள்ள வருவாய்த் துறை சான்றில் வருவாய் ஆய்வாளா் அவா்களின் கையொப்பம் பெற்று பூா்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்களுக்குக்கென தனியாக வங்கி கணக்கு உள்ள புத்தகம், ஆதாா் அட்டை,குடும்ப அட்டை, கல்விச்சான்றிதழ்கள்,ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.