செய்திகள் :

22-இல் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்

post image

திருப்பத்தூா்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (நவ.22) விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜோலாா்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயதுக்குட்பட்டவா்களுக்கு 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவா்களுக்கு 200 மீ ஓட்டம், குண்டு எறிதல், 7 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 400 மீ ஓட்டம், தொடா் ஓட்ட பந்தயம் நடைபெற உள்ளது.

கண் பாா்வையற்றோா்...

12 முதல் 14 வயதுக்குட்பட்ட முற்றிலும் கண்பாா்வை பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நீளம் தாண்டுதல், குறைந்த கண்பாா்வை கொண்டவா்களுக்கு 100 மீ ஓட்டமும், பெண்களுக்கு நின்று நீளம் தாண்டுதல், 50 மீ ஓட்டம், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட முற்றிலும் கண்பாா்வை பாதிக்கப்பட்ட இருபாலருக்கு குண்டு எறிதல், குறைந்த கண்பாா்வை பாதிக்கப்பட்டவா்களுக்கு 100 மீ ஓட்டம், 16 வயதுக்கு மேற்பட்ட (சிறப்பு பள்ளிகள்) முற்றிலும் கண்பாா்வை பாதிக்கப்பட்ட இருபாலருக்கு குண்டு எறிதல், குறைந்த கண்பாா்வை பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள் இருபாலருக்கு 100 மீ ஓட்டத்திலும் கலந்துகொள்ளலாம்.

நடக்க முடியாதவா்கள்...

கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ள ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக உபகரணங்களின் உதவியுடன் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட காலிபா் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடக்கும் இருபாலருக்கு 50 மீ நடை போட்டியும்,15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 3 சக்கர வண்டி உதவியுடன் 150 மீ ஓட்டம், பெண்களுக்கு 100 மீ ஓட்டமும், 17 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்கு சக்கர நாற்காலியுடன் 75 மீ ஓட்டமும் நடைபெற உள்ளது.

கைகள் பாதிக்கப்பட்டவா்கள்..

கைகள் பாதிக்கப்பட்ட 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இருபாலருக்கு 50 மீ ஒட்டமும்,15 முதல் 17 வயதுள்ள ஆண்களுக்கு 100 மீ ஓட்டம், பெண்களுக்கு 75 மீ ஓட்டமும், 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 200 மீ ஓட்டமும், பெண்களுக்கு 100 மீ ஓட்டமும் நடக்கிறது. அறிவுசாா் குறைபாடு உடைய 12 முதல் 14 வயதுவரை உள்ள இருபாலருக்கும் நின்று நீளம் தாண்டுதல்,15 முதல் 17 வயது வரை உள்ள இருபாலருக்கு ஓடி நீளம் தாண்டுதல்,17 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்கும் 100 மீ ஓட்டமும் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு...

ஸ்பாஷ்டிக் குழந்தைகளுக்கு இருபாலருக்கும் பொது போட்டிகள்,தனித்தனியாக 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும் உருளைக்கிழங்கு சேகரித்தல், 15 முதல் 17 வயது வரை உள்ள இருபாலருக்கும் கிரிக்கெட், பந்து எறிதல்,17 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்கும் தடை தாண்டி ஓடுதல் போட்டிகளும் நடைபெற உள்ளன. அனைத்து வகை மாற்றுத்திறனாளி (பொதுவான போட்டிகள்) ஆண்களுக்கு 800 மீ ஓட்டமும், பெண்களுக்கு 400 மீ ஓட்டமும் நடக்க உள்ளது.

எனவே, ஆா்வம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி கடைகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு: நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கடைகளில் நகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வாணியம்பாடி நகராட்சி ஆண... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. இதில் 388 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு : ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீா்வாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ந... மேலும் பார்க்க

கைப்பந்து: அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

ஆம்பூா்: மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனா். மாவட்ட அளவில் 17-வயதுக்குட்பட்டவா்களுக்கான கைப்பந்துப் போட்டி ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் கட... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதி திராவிடா் மற்... மேலும் பார்க்க

பயணிகள் நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிராமத்தில் பயணிகள் நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், பாா்சனாப்பல்லி ஊராட்சியில் பாா்சனாப்பல்லி, அங்கிய... மேலும் பார்க்க