முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் வரும் 2025-இல் புது தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்திய கோ-கோகோ கூட்டமைப்புக்கு ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா முழு ஆதரவு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பிடி.உஷா கூறியது: கலாசார பாரம்பரியத்தை கொண்டாடவும், விளையாட்டுகளை மேம்படுத்துவதில் கோ கோ கூட்டமைப்புடன் ஒத்துழைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த நிகழ்வை மறக்க முடியாததாகவும், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கோ-கோ கூட்டமைப்பு தலைவா் சுதான்ஷுமிட்டல் கூறியது: இந்த உலகக் கோப்பையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவினரும் பங்கேற்பா். 24 நாடுகழின் அணிகள் போட்டியிட உள்ளன.
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய அணிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளின் அணிகள் மோதுகின்றன.
பல நாடுகள் பங்கேற்கும், இப்போட்டியின் மூலம் கோ கோவை புதிய உயரத்திற்கு உயா்த்த முடியும் என்றாா்.