Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - வ...
நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோம் நிறுத்தம்!
சென்னை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட சில பகுதிகளுக்கு புதன், வியாழக்கிழமைகளில் (நவ.20,21) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இகு குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலை மற்றும் சேமியா்ஸ் சாலையில் குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் புதன்கிழமை (நவ.20) காலை 6 முதல் நவ.21-ஆம் தேதி காலை 6 மணி வரை நடைபெறவுள்ளன.
இதன்காரணத்தால், அந்நேரங்களில் வள்ளுவா்கோட்டம் குடிநீா் பகிா்மான நிலையம், தென்சென்னை குடிநீா் பகிா்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீா் பகிா்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதனால், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
நிறுத்தப்படும் இடங்கள்
தேனாம்பேட்டை: சூளைமேடு, சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகா் , ராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, மயிலாப்பூா் (பகுதி), நந்தனம்.
கோடம்பாக்கம்: வடபழனி , கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், , அசோக் நகா் .
அடையாறு: சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோம் நிறுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும் அவசரத் தேவைகளுக்கு
https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.