செய்திகள் :

பாகிஸ்தானுடனான டி20 தொடா்: முழுமையாகக் கைப்பற்றியது ஆஸி.

post image

பாகிஸ்தானுடனான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.

முதலில் பாகிஸ்தான் 18.1 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 11.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகளே இழந்து 118 ரன்கள் சோ்த்து வென்றது. அந்த அணியின் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாகவும், ஸ்பென்சா் ஜான்சன் தொடா்நாயகனாகவும் (8 விக்கெட்டுகள்) தோ்வாகினா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக, பாபா் ஆஸம் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்க்க, ஹசீபுல்லா கான் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்தாா்.

எஞ்சிய பேட்டா்களில் சஹிப்ஸதா ஃபா்ஹான் 9, உஸ்மான் கான் 3, கேப்டன் சல்மான் அகா 1, இா்ஃபான் கான் 10, அப்பாஸ் அஃப்ரிதி 1, ஜஹன்தத் கான் 5, ஷாஹீன் அஃப்ரிதி 16, சூஃபியான் முகீம் 1 ரன்னுக்கு அடுத்தடுத்து வீழ, பாகிஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய பௌலா்களில் ஆரோன் ஹாா்டி 3, ஸ்பென்சா் ஜான்சன், ஆடம் ஸாம்பா ஆகியோா் தலா 2, சேவியா் பாா்ட்லெட், நேதன் எலிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து, 118 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய தரப்பில், மேத்யூ ஷாா்ட் 2, ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க் 18, கேப்டன் ஜாஷ் இங்லிஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 61, டிம் டேவிட் 7 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் அணியில், ஷாஹீன் அஃப்ரிதி, ஜஹன்தத் கான், அப்பாஸ் அஃப்ரிதி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பாா்டா் காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடா்!

அஸ்வினிடம் அதிகம் கற்றுள்ளேன்அஸ்வின் அருமையான, உலகத் தரம் வாய்ந்த பௌலா். எனது கிரிக்கெட் காலத்தில் பெரும்பாலும் அவரோடு நேருக்கு நோ் மோதியிருக்கிறேன். அதனால் அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். ... மேலும் பார்க்க

வாகை சூடினாா் யானிக் சின்னா்!

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்றுள்ள அவா், அதையும் தனது சொந்த மண்ணிலேயே பெற்று... மேலும் பார்க்க

அரையிறுதியில் இன்று இந்தியா - ஜப்பான் மோதல்

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானுடன் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மோதுகிறது.குரூப் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட... மேலும் பார்க்க

முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது

கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில் வரும் 2025-இல் புது தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்திய கோ-கோகோ கூட்டமைப்புக்கு ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா மு... மேலும் பார்க்க

திருப்பதியில் கூட்ட நெரிசலை குறைக்க ஏஐ தொழில்நுட்பம்! ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

திருமலை திருப்பதி தேவஸ்தானம்(டிடிடி) அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற அதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று(நவ. 18) நடைபெற்றது. திருப்பதி கோயிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: வி.ஜே. விஷாலைத் தோற்கடித்து கேப்டனானார் மஞ்சரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டனாக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி தேர்வாகியுள்ளார். கடந்த இரு வாரங்களாக ஆண்கள் அணியில் இருந்தவர்கள் கேப்டனான நிலையில், இந்த வாரம் பெண்கள் அணியைச் சேர்ந்தவர் கேப்டனாக... மேலும் பார்க்க