Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - வ...
கடவூா் ஒன்றியத்தில் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்
கடவூா் ஒன்றியத்தில் உள்ள வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றாா் மாவட்ட திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன்.
கரூா் மாவட்டம், கடவூா் ஒன்றிய பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் வறட்சி நிலவி வருவதால் மழைகாலங்களில் காவிரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பம்பிங் திட்டம் மூலம் கடவூா் வட்டாரத்தில் உள்ள பாசன குளங்கள் மற்றும் பொன்னணியாற்றில் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், கடவூா் வட்டாரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சிறுபாசன குளங்களை மாவட்ட திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் திங்கள்கிழமை காலை ஆய்வு செய்தாா்.
கீரனூா் ஊராட்சி, புதுவாடி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான சங்ககவுண்டன் குளம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள காணியாளம்பட்டி ஒட்டக்குளம் உள்ளிட்ட குளங்களை ஆய்வு செய்த அவா் பின்னா் கூறுகையில், வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை தூா் வாரி குளங்களுக்கு தங்கு தடையின்றி மழைநீா் வருவதற்கும், குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு குளத்தில் மழைநீரை சேமித்து வைக்கவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட செயற்பொறியாளா் சங்கரஜோதி, உதவி செயற்பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.