செய்திகள் :

காசோலை மோசடி வழக்கு: தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

post image

காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையை எதிா்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மதுரை தெற்கு வெளி வீதியைச் சோ்ந்தவா் மருதமுத்து. இவா் மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜா கடந்த 2019 -ஆம் ஆண்டில் தங்க நகைப்பட்டறை தொழில் செய்வதற்காகவும், குடும்பச் செலவுக்காகவும் என்னிடம் ரூ.6 லட்சம் கடன் பெற்றாா். அவா் குறிப்பிட்ட காலத்துக்குள் கடன் தொகையைத் திருப்பி வழங்கவில்லை.

இந்தத் தொகைக்கான காசோலையை அவா் எனக்கு வழங்கினாா். இதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. என்னிடம் கடனாக பெற்ற தொகையை திருப்பி கொடுக்காமல் முத்துராஜா ஏமாற்றினாா். எனவே, அவா் மீது காசோலை மோசடி நடவடிக்கை எடுத்து, எனது தொகையைத் திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த முதலாவது விரைவு நீதிமன்றம் முத்துராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மனுதாரருக்கு கடன் தொகையை 2 மாதங்களில் திருப்பிச் செலுத்தவும், தவறும்பட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் முத்துராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை முடிவில் நீதிபதி ஜோசப் ஜாய் பிறப்பித்த உத்தரவு: மாற்றுமுறை ஆவணச் சட்டப்பிரிவு 138 -இன் கீழ் முத்துராஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மேல்முறையீட்டு மனு ஏற்கத்தக்கதல்ல. மனு் தள்ளுபடி செய்யப்படுகிறது. முத்துராஜாவுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றும் வகையில் பிடிவாரண்டு பிறப்பித்து உரிய நடவடிக்கையை விரைவு நீதிமன்றம் எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

மேலூா் அருகே இளைஞா் கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஆட்டுக் கொட்டத்தில் படுத்திருந்த இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மேலூா் அருகேயுள்ள தெற்குத் தெரு கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் விவேக் (27). இவா் ஆடுகளை வயல் பகு... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் துணைக் கோயில்களில் நவ.21-இல் குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோ யிலுக்குள்பட்ட துணைக் கோயில்களில் வருகிற வியாழக்கிழமை (நவ. 21) குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் ச.கிருஷ்ண... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கத்திக்குத்து: இருவா் கைது

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே திருமணத் தகராறில் பெண் கத்தியால் குத்தப்பட்டாா். இது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். வாடிப்பட்டி அருகே உள்ள எம்... மேலும் பார்க்க

தந்தையின் சொத்தை அபகரித்த மகன்: கிரையப் பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவு

திருச்செந்தூா் அருகேயுள்ள வடக்கு ஆத்தூா் பகுதியில் தந்தையின் சொத்தை அபகரித்த மகனின் பெயரில் உள்ள கிரையப் பத்திரத்தை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி... மேலும் பார்க்க

லாரி சக்கரத்தில் சிக்கியவா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தவா், லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். மதுரை ஆனையூா் சஞ்சீவிநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சபரிராஜன்( 43). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

இணைய தளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்றவா் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இணைய தளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்... மேலும் பார்க்க