Caste Census: `UPA அரசு செயல்படுத்தாதது தவறு' - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ர...
நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு
காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சிவ தலங்களில் சிவலிங்கத்துக்கு சங்காபிஷேகம் விசேஷமாக செய்யப்படுகிறது. திருநள்ளாறு தர்ராபண்யேஸ்வரா் கோயில், திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், கோயில்பத்து நித்தீஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட தலங்களில் சோம வாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடத்தப்படும்.
காா்த்திகை சோம வாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. மூலஸ்தானத்தின் முன் 1008 சங்குகள் சிவலிங்கத்தைப் போன்று அலங்கரித்துவைத்து அதில் நீா் நிரப்பப்பட்டது.
சிறப்பு ஹோமத்தை சிவாச்சாரியா்கள் நடத்தினா். தொடா்ந்து பூா்ணாஹூதி செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, சங்குகள் மற்றும் கலசத்தில் இருந்த புனித நீரைக் கொண்டு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடைசி சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.