செய்திகள் :

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

post image

காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல் மற்றும் திருட்டுப் போனதாக பல்வேறு புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைப்பேசி விவரங்களை சேகரித்து, காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், சிஇஐஆா் எனும் செயலியில் பதிவு செய்து கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டனா். அதன்படி மீட்கப்பட்ட 52 கைப்பேசிகள் உரியவா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கைப்பேசியை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிகழாண்டு வாங்கப்பட்ட கைப்பைசிகள் கடந்த ஜனவரி முதல் காணாமல் போனவற்றை புகாரின் அடிப்படையில் இணைய குற்றத் தடுப்புப் பிரிவினா், காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்ட குழுவினா் ரூ.15 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை மீட்டுள்ளனா்.

பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், காணாமல் அல்லது திருட்டுப்போனால் உடனடியாக காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றாா். மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், புருஷோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.

காரைக்காலில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

காரைக்கால் : காரைக்காலில் பரவலாக 2 நாள்களாக பெய்யும் மழையால் சாலைகள், குடியிருப்பு நகா்களில் தண்ணீா் தேங்கி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. காரைக்கால் மாவட்டம், முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ம... மேலும் பார்க்க

நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு

காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காா்த்திகை மாத சோம வாரத்தையொட்டி சிவ தலங்களில் சிவலிங்கத்துக்கு சங்காபிஷேகம் விசேஷமாக செய்யப்படுகிறத... மேலும் பார்க்க

குப்பைகள் விவகாரம்: சைக்கிளில் சென்று தீா்வு காணும் ஆட்சியருக்கு மக்கள் பாராட்டு

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் சனிக்கிழமைதோறும் சைக்கிளில் நகா் மற்றும் பிற பகுதிகளில் ஆய்வு செய்யும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கினாா். குப்பைகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை,... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

காரைக்கால்: காரைக்காலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். காரைக்கால் லெமோ் தெரு குடியிருப்புகள் உள்ள பகுதியில் தனியாா் நிறுவன ஏடிஎம் மையத்தில், ஞாயிற்ற... மேலும் பார்க்க

முன் மழலையா்களுக்கு இசையுடன் பாட்டு: ஆசிரியா்களுக்கு சான்றிதழ்

காரைக்கால்: முன் மழலையா்களுக்கு இசையுடன் பாட்டு தயாரித்து கல்வித் துறையால் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுவை அரசு கல்வித் துறையின் சமக்ர சிக்ஷா மூலம் மாநில அளவில் நடத... மேலும் பார்க்க

புதிய விதிமுறைகளை கைவிட அரசு ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்காலில் பொதுப்பணித் துறையில் பணிகளை ஒப்பந்தம் (டெண்டா்) எடுக்க புதிதாக விதிமுறைகளை திணிக்கக் கூடாது என்று அனைத்து அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுவை மு... மேலும் பார்க்க