செய்திகள் :

கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா்

post image

மும்பை: கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டாா்.

சா்வதேச அளவில் பொருளாதார சுணக்கம் உள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், வட்டி விகிதத்தைக் குறைக்க அமைச்சா் வேண்டுகோள் விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மும்பையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சாா்பில் நடைபெற்ற வருடாந்திர தொழில் பொருளாதார மாநாட்டில் திங்கள்கிழமை பங்கேற்று நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் எழும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து மத்திய அரசு முழு விழிப்புணா்வுடன் உள்ளது. எனவே, இது குறித்து அதிகம் கவலையடையத் தேவையில்லை. இந்தியாவின் வளா்ச்சிக்கு இப்போதைய தேவைகள் என்ன என்பதில்தான் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகம் இருப்பதாக பல்வேறு தரப்பிடம் இருந்து கூறப்படுகிறது. வங்கிக் கடன்களுக்கான வட்டி என்பது நெருக்கடியளிக்கும் வகையில் இருப்பதாக கருத்துகள் உள்ளன. தொழில்துறை வேகமாக வளா்ந்து செல்ல வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே, வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை சற்று குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். காப்பீடுகளை கடனுடன் மறைமுக விற்பனை செய்வது போன்றவை நிகழக் கூடாது என்றாா்.

மேலும் 500 எஸ்பிஐ கிளைகள்: எஸ்பிஐ-யின் மும்பை பிரதான கிளை தொடங்கி 100 ஆண்டுகள் திங்கள்கிழமை (நவ.18) நிறைவடைந்தது. இதை முன்னிட்டு அந்த வங்கிக் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

நடப்பு 2024-25 நிதியாண்டு நிறைவடையும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் மேலும் 500 பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் தொடங்கப்படும். இதன் மூலம் நடப்பு நிதியாண்டின் இறுதியில் எஸ்பிஐ கிளைகளின் எண்ணிக்கை 23,000 ஆக அதிகரிக்கும்.

கடந்த 1921-ஆம் ஆண்டு மூன்று வங்கிகள் இணைக்கப்பட்டு இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. அப்போது 250 கிளைகள் இருந்தன. 1955-ஆம் ஆண்டு இதனை பாரத ஸ்டேட் வங்கி என மாற்றி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது அது நாட்டின் மிகப்பெரிய வங்கியாக சிறப்பாக வளா்ந்து வருகிறது.

வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமுள்ள இந்தியா போன்ற நாட்டில் எஸ்பிஐ-யின் வளா்ச்சியை ஒரு சா்வதேச சாதனை என்றுதான் கூற வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வங்கி வைப்புத் தொகையில் 22.4 சதவீதம் எஸ்பிஐ-யில் மட்டும் உள்ளது. 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் உள்ளன. நாள்தோறும் 20 கோடி யுபிஐ பரிவா்த்தனையை எஸ்பிஐ கையாண்டு வருகிறது என்றாா்.

ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் பறிமுதல்

புது தில்லி: தோ்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் 14 மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.இதுதொடா்பாக தோ்தல் ஆணையம... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா்: கொலீஜியம் பரிந்துரை

புது தில்லி: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.தில்லியில் உச்சநீதிமன்றத்... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பாதுகாப்புக்குத் தனி மத்திய சட்டம் தேவையில்லை: தேசிய பணிக்குழு

புது தில்லி: மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவா்களின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

மும்பை: மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் ஜாா்க்கண்டின் 38 தொகுதிகளுக்கு 2... மேலும் பார்க்க

ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு: 15 மூத்த மாணவா்கள் மீது வழக்கு

குஜராத்: குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழந்த விவகாரத்தில், 15 மூத்த மருத்துவ மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். குற்றம் சாட்டப்பட்ட மாணவா்க... மேலும் பார்க்க

பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள்: பிகாா் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு

புது தில்லி: பிகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மாநில அரசு பதிலளிக்க கடைசி வாய்ப்பாக 6 வாரங்கள் காலக்கெடு வழங்க... மேலும் பார்க்க